2024 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்
| |||||||||||||||||||||||||||||
538 உறுப்பினர்கள்வாக்காளர் குழுக்களின் 538 உறுப்பினர்கள் வெற்றிபெற 270 வாக்காளர் குழுக்கள் வாக்குகள் தேவை | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | TBD | ||||||||||||||||||||||||||||
அறிவிக்கப்பட்டது | 94% | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகளின் வரைபடம். சிவப்பு[b] திரம்பு/வான்சுக்கு திட்டமிடப்பட்ட மாநிலங்களைக் குறிக்கிறது. நீலம்[c] ஹாரிஸ்/வால்சுக்கு திட்டமிடப்பட்ட மாநிலங்களைக் குறிக்கிறது. சாம்பல் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலைகளைக் குறிக்கிறது.[6] இலக்கங்கள் ஒதுக்கப்பட்ட வாக்காளர் குழுக்களைக் குறிக்கிறது. | |||||||||||||||||||||||||||||
|
2024 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் (2024 United States presidential election) ஐக்கிய அமெரிக்காவில் 60-ஆவது நான்கு-ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அரசுத்தலைவர் தேர்தலாகும். இது செவ்வாய்க்கிழமை 2024 நவம்பர் 5 அன்று நடைபெற்றது.[7] 2017 முதல் 2021 வரை 45-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனால்ட் டிரம்ப், மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளரும் நடப்பு துணைக் குடியரசுத் தலைவருமான கமலா ஆரிசைத் தோற்கடித்தார். ஒகையோ மாநில இளநிலை மூதவை உறுப்பினர் சே. டி. வேன்சு, மினசோட்டா மாநில ஆளுநர் டிம் வால்சைத் தோற்கடித்து துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9] இவர்கள் இருவரும் வாக்காளர் குழுக்களின் முறையான தேர்தலுக்குப் பிறகு, 2025 சனவரி 20 அன்று 47-ஆவது அரசுத்தலைவராகவும், 50-ஆவது துணைத் தலைவராகவும் பதவியேற்க உள்ளனர்.[10][11]
தகுதிகள்
[தொகு]ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்று 14 ஆண்டுகள் நிரம்பியவரும் மற்றும் 35 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினர் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர் ஆவார். இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர்கள் இத்தேர்தலில் போட்டியிட முடியாது.
முக்கிய போட்டியாளர்கள்
[தொகு]ஜனநாயக கட்சியின் போட்டியாளர்கள்
[தொகு]- இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக நடப்பு அதிபர் ஜோ பைடன் இரண்டாம் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் டீன் பிலிப்ஸ் மற்றும் மரியான் வில்லியம்சன் உள்ளனர்.
- பிறகு தன் உடல்நிலை காரணமாக ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை.
- பிறகு ஜோ பைடன் கமலா ஆரிசுவை ஆதரிக்க அவர் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடியரசுக் கட்சியின் போட்டியாளர்கள்
[தொகு]- குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப், விவேக் ராமசாமி மற்றும் நிக்கி ஹேலே ஆகியோர் அதிபர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர்.
- பிறகு உட்கட்சி தேர்தலில் டோனால்ட் டிரம்ப் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பின்னணி
[தொகு]தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக் காலம் சனவரி 2025ல் முடிய உள்ளதல், இத்தேர்தல் 5 நவம்பர் 2024 அன்று நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் 20 சனவரி 2025 அன்று அமெரிக்க அதிபராக பதவியேற்பார்.
கருத்துக் கணிப்புகள்
[தொகு]சமீபத்திய கருத்துக் கணிப்பில், 2024 இல் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனை விட டோனால்ட் டிரம்ப் தெளிவான முன்னிலை பெற்றுள்ளார். ரேஸ் டு தி டபிள்யூஹெச் கருத்துக் கணிப்பின்படி, ஜோபைடனின் 43.8% வாக்குகளும்; டோனால்ட் டிரம்ப் 45.1% வாக்குகளுடன் முன்னிலை பெற்று அதிகாரத்தைத் தக்கவைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
The Economist செய்தி நிறுவனம் வித்தியாசமாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெல்வதற்கு 63% வாய்ப்பு உள்ளது என்றும் அதே சமயம் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் வெல்வதற்கு 10% வாய்ப்பு மட்டுமே உள்ளது என கணித்துள்ளது.[12]
முடிவுகள்
[தொகு]தொனால்ட் திரம்பு 30 மாநிலங்களையும் கமலா ஆரிசு 18 மாநிலங்களையும் வென்றனர், இம்மாநிலங்களில் வெற்றி பெற்றால் அம்மாநிலங்களின் மொத்த தேர்வாளர்கள் வாக்கும் வென்ற வேட்பாளருக்கே செல்லும். நெப்ராசுக்கா, மெய்ன் ஆகிய மாநிலங்களில் தேர்வாளர்கள் வாக்கு பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இருவருக்கும் செல்லும், அவ்வகையில் வாக்குகளை இருவரும் பங்கு போட்டுக்கொண்டனர்.
தொனால்ட் திரம்பு வென்றவை
[தொகு]தெக்சாசு(40) , அரிசோனா(11) , நவாடா(6), ஊட்டா(6), ஐடகோ(4), மாண்டானா (4), வயோமிங்(3), வட டகோட்டா(3), தென் டகோட்டா(3), கேன்சசு (6), ஒக்லகோமா(7), ஐயோவா (6), மிசௌரி(10), லூசியானா(8), ஆர்க்கென்சாசு(6), +
குறிப்புகள்
[தொகு]- ↑ This tally only reflects projections made unanimously by ABC,[2] Associated Press,[1] CBS,[3] CNN,[4] and NBC.[5]
- ↑ Dark red for states where ABC, AP, CBS, CNN, and NBC have all projected a win; light red for states where only a majority of these sources have projected a win.
- ↑ Dark blue for states where ABC, AP, சிபிஎஸ், CNN, and NBC have all projected a win; light blue for states where only a majority of these sources have projected a win.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "2024 Presidential Election Results". அசோசியேட்டட் பிரெசு. November 5, 2024. பார்க்கப்பட்ட நாள் November 8, 2024.
- ↑ "2024 US Presidential Election Results: Live Map". ABC. பார்க்கப்பட்ட நாள் November 8, 2024.
- ↑ "Presidential election results 2024 data". சிபிஎஸ். பார்க்கப்பட்ட நாள் November 8, 2024.
- ↑ "Presidential election results 2024". CNN. பார்க்கப்பட்ட நாள் November 8, 2024.
- ↑ "Presidential Election 2024 Live Results: Donald Trump wins". NBC. பார்க்கப்பட்ட நாள் November 8, 2024.
- ↑
- "Presidential Election 2024 Live Results: Donald Trump wins". NBC News. பார்க்கப்பட்ட நாள் November 8, 2024.
- "Presidential election results 2024". CNN. பார்க்கப்பட்ட நாள் November 8, 2024.
- "Presidential election results 2024 data". CBS News. https://www.cbsnews.com/elections/2024/president/.
- "2024 Election: Donald Trump elected 47th President of the United States". அசோசியேட்டட் பிரெசு. பார்க்கப்பட்ட நாள் November 8, 2024.
- "2024 US Presidential Election Results: Live Map". ABC News. பார்க்கப்பட்ட நாள் November 8, 2024.
- ↑ Munson, Olivia (November 1, 2024). "Is Election Day a federal holiday? What to know before decision day 2024". USA Today. பார்க்கப்பட்ட நாள் November 3, 2024.
- ↑ "Trump wins the US Presidency". AP News. November 6, 2024. https://apnews.com/live/trump-harris-election-updates-11-5-2024. பார்த்த நாள்: November 6, 2024.
- ↑ Tumin, Remy; Rogers, Katie (November 6, 2024). "Harris Will Deliver Concession Speech to Nation After Losing to Donald Trump". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2024/11/06/us/politics/harris-concession-speech-address-time.html.
- ↑ Bowden, George (November 6, 2024). "When does Trump become US president again?". BBC News. https://www.bbc.com/news/articles/cde7ng85jwgo.
- ↑ Miller, Zeke; Price, Michelle L.; Weissert, Will; Colvin, Jill (November 5, 2024). "Trump wins the White House in political comeback rooted in appeals to frustrated voters". அசோசியேட்டட் பிரெசு. பார்க்கப்பட்ட நாள் November 6, 2024.
- ↑ 2024 அமெரிக்க அதிபர் தேர்தல்